Published : 28 May 2014 11:57 AM
Last Updated : 28 May 2014 11:57 AM

அசோக் பி. ஹிந்துஜா - இவரைத் தெரியுமா?

$ ஹிந்துஜா குழுமத்தின் (இந்தியா) தலைவர். ஹிந்துஜா குழுமத்தின் நிறுவனர் பரமானந்த ஹிந்துஜாவின் நான்காவது மகன்.

$ இவர்களது குழும நிறுவனங்கள் 37 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களை இவர் கவனித்துக்கொள்கிறார். குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில் இந்தியாவில் இருப்பது சுமார் 25 சதவீதம்தான்.

$ மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம், ஐரோப்பிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.

$ அமிதாப்பச்சன் ரசிகரான இவர், அவரது சில படங்களுக்கு நிதி உதவியும் செய்திருக்கிறார்.

$ ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உடையவர். டீ கூட குடிக்காதவர்.

$ இவருக்கென்று தனியாக சொத்துமதிப்பு பற்றிய தகவல் இல்லை. ஹிந்துஜா குழுமத்தின் நான்கு சகோதரர்களின் சொத்து மதிப்பு 1,200 கோடி டாலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x